full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

அப்பாவானார் நடிகர் விதார்த்

மைனா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த்.

இவர் அஜீத்துடன் வீரம், குற்றமே தண்டனை, காடு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை ’படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் விதார்த்துக்கு பழனியில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பழனியைச் சேர்ந்த காயத்திரிக்கும், விதார்த்திற்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.