full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்

மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாட்டுமக்கள் செய்த அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 70 வது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக செப்டம்பர் 14 முதல் 20 வரை சேவா சப்தாவை ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளைசெய்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சசிதரூர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.நடிகை கங்கனா ரனாவத் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இந்த நாட்டின் சாமானியருக்கு அவர் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரைப் போன்ற ஒரு பிரதமரைப் பெறுவது நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் அவர்கள் கருதுகிறாகள் என கூறி உள்ளார்.