full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

அகிலன் – Movie Review

ஹார்பரில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல்களுக்கு முக்கிய புள்ளியாக ஜெயம் ரவி இருக்கிறார். வாழ்க்கையில் எந்த விஷயத்திற்காகவும் கவலைப்படாமல் வாழ்ந்து வருகிறார். மொத்த கடற்கரைக்கு ராஜாவாக இருக்க விருப்பப்படுகிறார் ஜெயம் ரவி. இதற்காக தலைவனாக இருக்கும் கபூரை ஜெயம் ரவி சந்திக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகபல பிரச்சனைகளை ஜெயம் ரவி சந்திக்க நேர்கிறது. அதன்பின்னர் பல நாடுகளில் உளவு செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார்.மறுபுறம் ஜெயம் ரவியை கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டுகிறது. இறுதியில் போலீஸ் ஜெயம் ரவியை கைது செய்தார்களா? தலைவனாக ஜெயம் ரவி முயற்சி செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

Agilan review. Agilan Tamil movie review, story, rating - IndiaGlitz.com
துறைமுக வேலை செய்யும் நபராக வரும் ஜெயம் ரவி, அவருக்கே உரித்தான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கோபம், காதல், திட்டமிடல் போன்ற பல உணர்வுகளை எதார்த்தமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். வசன உச்சரிப்பு மொழி அவருக்கு சிறப்பாக பொருந்தியுள்ளது. போலீஸாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும் படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிசந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

Agilan Making Video: BTS of Jayam Ravi's Action Movie Tamil Movie, Music Reviews and News
துறைமுகம், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடற்கரையும், அதனை சார்ந்த கதைக்களத்தை அமைத்து படத்தின் காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். சாதாரண கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் விறுவிறுப்பும் சுவாரசியமுமாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஆக்ஷன் கலந்து கொடுத்துள்ளார்.படத்தை காட்சிப்படுத்த கடுமையாக உழைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம். இவரின் உழைப்பு சில காட்சியில் தெரிகிறது. படத்தின் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைத்து கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.