full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

 

 

 

 

`குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் அஜித்தை வைத்து `பில்லா’, `ஆரம்பம்’ என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஷேர்ஷா படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் 61-வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அஜித்துக்கு, விஷ்ணுவர்தன் போனிலேயே கதை சொன்னாராம். இந்தக்கதை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இதனால் அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  அஜித் தற்போது வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை படத்தின் பணிகளை தொடங்க வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.