full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

நயன்தாராவுடன் இணையும் அனிருத்

விஜய்யின் ‘கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் களம் இறங்கிய லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தை தவிர ‘இப்படை வெல்லும்’, ‘கரு’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க இருக்கிறது. டார்க் காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘கோ கோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலிப்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடியனாக யோகி பாபு நடிக்க இருக்கிறார். அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.