full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

நட்புக் கூட்டணியில் இணைந்த அஞ்சலி!

நீண்ட இடவெளிக்குப் பிறகு மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது.

நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து “நாடோடிகள் 2” படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, M.சசிகுமாரை மூன்றாம் முறையாக இயக்குகிறார்.

இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

மேலும் ஒரு சிறப்பாக, இந்தப் படத்திற்கு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரோடு முதல் பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

குறிப்பாக அஞ்சலி, சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியோடு இணைந்திருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.