full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!


கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினி நடிக்க ‘பேட்ட’ படம் உருவாகி வருகிறது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், இயக்குநர் சசிகுமார் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் 2 போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல இயக்குநர் மகேந்திரன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை’ போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.