full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

காதல் படத்தில் கெஸ்ட் ரோலில் அர்ஜூன்

அர்ஜூன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிபுணன்’.

அர்ஜூனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான டீசர் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அர்ஜூன், அருண் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “இரண்டு வருடங்களில் உருவான படம் இது. வெள்ளம், பணமதிப்பு நீக்கம் என ஆரம்பித்து தற்போது ஜிஎஸ்டி வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. என்னுடன் பணிபுரிந்த அனைவரும் சிறப்பான உழைப்பைக் கொடுத்திறார்கள். அனைவருக்கும் நன்றி. அர்ஜூன் அவர்களின் 150வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.” என்றார்.

அவரைத் தொடர்ந்து அர்ஜூன் பேசும் போது, “எனக்கே தெரியாமல் 150 கணக்கு வந்து விட்டது. ஆனாலும் இப்போது தான் முதல் படத்தில் நடித்தது போல இருக்கிறது. இது வரை என்னுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் எனது நன்றி. என் மகளை வைத்து படம் இயக்குகிறேன். அது ஒரு காதல் படம். அதில் சின்ன கெஸ்ட் ரோலில் வருகிறேன். என்னை வைத்து படம் இயக்கி போர் அடித்து விட்டது. வேறு நடிகரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன். கதைக்கு ஏற்றார் போல் நடிகரை தேர்வு செய்ய இருக்கிறேன். விஷாலுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறேன்.” என்றார்.