full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

வழக்கம் போல் மாணவிகளே பிளஸ்-2 தேர்வில் அதிகம் தேர்ச்சி

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட இது 0.7 சதவீதம் கூடுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5 ஆகும். இதனால் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1180 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் ஏ கிரேடு பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஆயிரத்து 171 பேர் ஏ கிரேடு பெற்றுள்ளனர்.

ஏ கிரேடு பெற்றவர்களிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர். 841 மாணவிகளும், 330 மாணவர்களும் ஏ கிரேடு பெற்றுள்ளனர்.