full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 14.05.2018

* கீழடி அகழாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை : தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

* காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. 33வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உச்சநீதிமன்றம்.

* காவிரி வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுபி.சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜர் : காவிரி மேலாண்மை வாரிய வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார் யுபி.சிங்.

* தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன் அவர் என் முன்னாள் சகோதரி – திவாகரன்.

* சசிகலாவின் நோட்டீசை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இனி சசிகலா குறித்து பேச மாட்டேன் – திவாகரன்.

* போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மை தான், சந்தித்தது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை என் வேலையல்ல : பொன். ராதாகிருஷ்ணன்.

* தமிழகத்தில் வேளாண் படிப்புக்கான கலந்தாய்வும் ஆன்லைனில் நடத்தப்படும். மே 18 முதல் https://t.co/c8DPhgc0MZ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – துணைவேந்தர் ராமசாமி.

* டெல்லியில் புழுதி புயல் காரணமாக டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 2 தனியார் விமானங்கள் ரத்து.

* புதுச்சேரி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாததால் சிபிசிஐடி காவல் அதிகாரியாக பழனிவேல் மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியாக சுப்பிரமணியம் நியமனம்.

* கனடாவில் அலுமினிய ஆலைக்கு நிதியுதவி அளிப்பதாக பிரதமர் ஜஸ்டின் உறுதியளித்த சில நாட்களிலேயே அங்குள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை.