full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 24/04/18 !

* ஜம்மு – காஷ்மீர் : புல்வாமா அருகே பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர், ஒரு காவலர் உயிரிழப்பு.

* மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே சரியான முறையாகும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.

* மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் வழக்கில் தமிழக அரசின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

* கிராமப் புறங்களில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம்.

* குட்கா வழக்கிற்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சி விசாரணை அதிகாரிகளை மாற்றி, கோப்புகளை மறைப்பதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகார்.

* சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* பட்டுக்கோட்டை அருகே மகள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 4 ஆயுள்தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.

* தினகரன், வெற்றிவேல் உள்ளிட்டோர் ஈபிஎஸ் அணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாக எனக்கு தகவல் – திவாகரன்.

* நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறு – திவாகரன்.

* அசராம் பாபு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

* சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் 19 பேர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

* குரல் மாதிரி சோதனைக்காக நிர்மலாதேவியின் குரல் மாதிரியை சென்னையில் உள்ள குரல் ஒப்பீடு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது சிபிசிஐடி.

* உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன – அமிதாப் கந்த், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி.

* டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு.

* நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ராகுல்காந்தி தமிழகத்தில் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொள்வார் – திருநாவுக்கரசர்.

* மு க ஸ்டாலினால் எப்போதும் முதல்வராக முடியாது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* பிரதமரின் வாக்குறுதிப்படி ரூ.15 லட்சம் டெபாசிட் எப்போது ? ஆர்.டி.ஐ.க்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு.

* ஊழலின் மொத்த உருவமே திமுக தான். அரசியல் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் காணாமல் போவார் : அமைச்சர் ஜெயக்குமார்.

* அதிமுக நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. யாரோடு கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் : மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.

* ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ் தொகையையும், டெபாசிட் தொகையையும் திருப்பித் தர வேண்டும் : அந்நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாளை உண்ணாவிரதம்.

* திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் மனோஜ் கோஷ் கைது.

* தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்.

* கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல 4-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு.

* புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்ட, கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் தற்காலிக மருத்துவர் விவேக் கைது.

* சென்னை போரூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரமசிவம்(45) கைது.

* ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

* பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஓராண்டுக்கு மட்டும் விலக்கு – இந்திய மருத்துவ கவுன்சில்.

* கர்நாடக சட்டமன்றத் தேர்தல் : பாதாமி தொகுதியில் போட்டியிட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்தார்.

* சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சேலம் மாநகர போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தகவலை தொடர்ந்து போலீசார் பல்கலைக்கழகத்தில் விசாரணை.

* சென்னை பல்லாவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்.

* பிரதமரை கொல்லப்போவதாக தொலைபேசி உரையாடல், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மீண்டும் கைது.

* பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

* கருக்கலைப்பு சம்பவங்களுக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.

* சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

* வேலூர் : குடியாத்தம் அருகே நாகல் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த 23 பேர் மீட்பு