full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

தெலுங்கு படத்தில் நடிக்க விரும்பும் தனுஷ்

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது `வடசென்னை’ படத்தை நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் `ஃபகீர்’ என்ற ஆங்கிலம்-பிரெஞ்சு மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.

தனுஷ் தற்போது `மாரி-2′, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியிருப்பதாகவும், தனுஷ் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீவிஷ்ணு, சாத்னா டைட்டஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் கல்வியை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மாணவர்களின் கல்விமுறை, சரியான வழியில் பயில்கிறார்களா என்பதைப் பற்றி இந்த படத்தில் அலசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.