full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

திரௌபதி சினிமா பார்வை

நடிகர்கள்            ரிச்சர்ட் ரிஷி,ஷீலா ராஜ்குமார்
இயக்கம்             மோகன் ஜி
சினிமா வகை  Drama
கால அளவு        159
கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூர் அரசியல்வாதி அந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை பிரபாகரனும், திரௌபதியும் எதிர்க்கிறார்கள்.

இதையடுத்து அந்த அரசியல்வாதி திரௌபதியின் தங்கைக்கும், வேறு சாதியை சேர்ந்த இளைஞருக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக போலிச் சான்று தயாரித்து அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்பி வைக்கிறார். அவமானம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொல்கிறார். வில்லன்கள் திரௌபதி மற்றும் அவரின் தங்கையை கொலை செய்து அந்த பழியை பிரபாகரன் மீது போடுகிறார்கள். பிரபாகரன் தான் ஆணவக் கொலை செய்துவிட்டார் என்று போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

ஜாமீனில் வெளியே வரும் பிரபாகரன் சென்னைக்கு சென்று அங்கு டீ விற்பவர் போன்று நடித்து பதிவாளர் அலுவலகத்தை நோட்டமிட்டு இரண்டு பேரை கொலை செய்கிறார். ஜாமீனில் வந்த பிரபாகரன் யார், யாரை எதற்காக கொலை செய்கிறார் என்பதே கதை.

திரௌபதி படத்தின் ட்ரெய்லரால் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. ஆனால் ட்ரெய்லர் அளவுக்கு படம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சர்ச்சைக்குரிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதுவும் நல்லதுக்கே. சாதிப் பிரச்சனையை வைத்து காசு பார்க்கும் ஆட்களை படம் குறி வைக்கிறது.

முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. திரைக்கதை பரிட்சயமாக உள்ளது என்றாலும் பிரபாகரனின் வாழ்க்கை, திரௌபதியின் மரணத்தை சுற்றியுள்ள விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளது. இரண்டாம் பாதி மெதுவாக செல்வதுடன், நீளமும் அதிகம்.

இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்வதற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்குள் இருக்கும் கோபத்தை அவர் முகத்தில் காண முடியவில்லை. ரிச்சர்ட் மட்டும் அல்ல மற்றவர்கள் நடிப்பும் மேலோட்டமாக உள்ளது.