full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

பவுடர் படத்தின் முதல் பாடல் ரத்த தெறி தெறி ஜூன் வெளீயீடு

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், ரத்த தெறி தெறி எனும் முதல் பாடல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதே மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பவுடர் திரைப்படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம் ஆக நிகில் முருகன் தோன்றியுள்ளார். லியாண்டர் லீ மார்ட் இசையமைத்துள்ள ரத்த தெறி தெறி பாடல் சிங்கப்பூரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த பாடலின் கூடுதல் புரோகிராமிங்கை லத்வியாவில் உள்ள தி பேக்யார்டு ஸ்டூடியோசில் நீல் செய்ய, இசைக்கோர்வை மற்றும் மாஸ்டரிங்கை இந்தோனேசியாவின் அகெளஸ்டிக் ஆடியோவில் டாரென் விக் செய்துள்ளார்.

திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வித்யா பிரதீப் அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார், ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.
 
பவுடர் குழு
 
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி
இசை – லியாண்டர் லீ மார்ட்
ஒளிப்பதிவு – ராஜபாண்டி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
படத்தொகுப்பு – குணா
கலை இயக்குநர் – சரவணா
சண்டைக்காட்சி – விஜய்
உடைகள் – வேலவன்
புகைப்படங்கள் – ராஜா
சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்
ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்
டிஐ வண்ணம்: வீரராகவன்
வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர் – சரவணன்
தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா
தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்
ஆடியோ லேபிள் – டிவோ