full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

ENEMY-movie review

தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. தம்பி ராமையா எந்த பிரச்னையும் தன்னையும் தன மகனையும் நெருங்க கூடாது என்று வாழ்பவர் .பிரகாஷ் ராஜ் தன மகனை போலீஸ் அதிகாரி ஆக மற்ற வேண்டும் என்று பயிரிச்சி கொடுப்பவர் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் பயிற்சியில் ஈர்ந்து போன விஷால் ஆர்யாவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்கிறார்.திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது.இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் இருவரும் அதகளப்படுத்துகிறார்கள்.நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் மனதில் நிற்கிறார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.