full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

உடல் எடைகுறைக்கும் முயற்சியில் மரணம் அடைந்த பிரபல நடிகை!

இந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி முகர்ஜி (33) உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்து வந்தார். இதன் காரணமாக அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையிலேயே மிஸ்தி உயிரிழந்தார்.

கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும். இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். மாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம்.

இந்திய உணவுப் பண்பாடு அதிக அளவிலான மாவுச்சத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இந்த உணவுத் திட்டம் இந்தியச் சூழலுக்கு உகந்ததல்ல. கொழுப்பும் புரதமும் கொண்ட பொருட்களை மட்டுமே தொடர்ச்சியாக உண்ண முடியாது என்பதால் இந்த உணவுத் திட்டத்தை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

இந்த உணவுத் திட்டத்தை அனைவராலும் பின்பற்ற முடியாது. இதைப் பின்பற்ற விரும்புபவர்கள் முறையான மருத்துவ ஆலோசனைக்குப் பிறகுதான் தொடங்க வேண்டும்.சிறுநீரகப் பிரச்சினை இருப்பவர்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றக் கூடாது. கீட்டோவில் அதிக அளவிலான புரதம் வெளியாவதால் அதில் உள்ள அம்மோனியாவைச் சிறுநீரகத்தால் கிரகித்துக் கொள்ள முடியாது. பிறப்பிலேயே கொழுப்பை ஜீரணிக்கும் திறனற்றவர்கள் இதைத் தொடர முடியாது.