full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !

நட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.


தன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் 2012 ல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக  வெளிச்சம் பெற்றார். தன் கதை
சொல்லும் இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில்  முக்கியமாக கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம்,   திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா? கெட்டவரா?ஆகிய குறும்படங்களில்  நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார். மேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்து திரைப்பட இயக்க நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் அப்படத்தில் முக்கியமான சிறு பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

2018 ல் SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். மேலும் 2017 Behindwoods Gold Medal க்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகியாக ரட்சசன், அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் வீ ஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம் ( எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றவர் ), ஜாங்கிரி மதுமிதா ( ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படப்புகழ்),RNR மானோகர், சரத்( விஜய் டீவி KPY புகழ் ) ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.


விக்னேஷ் குமார் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கி நடிப்பதுடன் ஜோஷ் K, SB ஆர்ஜுன் மற்றும் ஹக்கா J ஆகியோருடன்  இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு படப்புகழ் RV சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத்தொகுப்பு செய்யசண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். KRAFTSWORKS நிறுவனம் DI மற்றும் CG செய்கிறது. ஒலியமைப்பு சரவணகுமார் செய்ய சுதன் பாலா பாடல்கள் எழுதுகிறார்.