full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

மாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..!!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னனி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

மாரி2-வில் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை இல்லாவிட்டாலும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்ற செய்தி தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் ”வடசென்னை” படத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் அடுத்த டார்கெட் மாரி 2 வாக தான் இருக்கிறது.