full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

காலேயில் இந்திய அணி ரன்கள் குவிப்பு

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து வலுவாக உள்ளது. புஜாரா 128 ரன்களுடனும் (225 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 103 ரன்களுடனும் (168 பந்து, 12 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 2 வது நாள் ஆட்டம் துவங்கியதும் மேற்கொண்டு 5 ரன்கள் சேர்த்த புஜாரா(133 ரன்கள்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரஹானேவும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 2- ஆம் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்துள்ளது. அஷ்வின் 47 ரன்களிலும் சகா 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.