full screen background image
Search
Tuesday 19 March 2024
  • :
  • :

‘ஜாக்பாட்’ விமர்சனம் – 4 / 5

2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேல் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இன்று காலையில் வெளியாகி காலைக்காட்சி பார்த்த ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான ரிசல்டைப் பெற்று வருகிறது ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் படம்.ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், திரை அரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள்.

இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்கிறது. அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன? ஆனந்த்ராஜூக்கு தெரியாமல் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நடிப்பு மற்றும் டான்சிற்கு பெயர்போன ஜோதிகா, இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, அதிலும் ஸ்கோர் செய்துள்ளார். ஒபனிங் சாங், சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக் என ஆக்‌ஷன் ஹீரோயினாக மிளிர்கிறார் ஜோதிகா. ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை, இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ரேவதிக்கு முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை.

குலேபகாவலி படத்தை போன்று இப்படத்தையும் காமெடி படமாகவே எடுத்துள்ளார் கல்யாண். ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தது சிறப்பு. காமெடி படமாக இருந்தாலும் இதில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘ஜாக்பாட்’ காமெடி கலாட்டா