full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் “தம்பி” படம்,

“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”

ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடலிலிருந்து…

சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வச்சது ஏன் ?

ஜீத்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல, எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் பிக்ஸ் ஆகிருந்தாங்க, இந்த காம்பினேஷன் எனக்கு பிடிச்சிருந்தது அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்கள தான் நான் செலக்ட் பண்ணினேன்.

இந்தக்கதை எப்படி எழுதினீங்க ?

ஜீத்து ஜோசப் : இந்தக்கதை என்னோடதல்ல, பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதியிருக்காங்க அவங்க கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம் அதனால தமிழ்ல சரியா இருக்கனும்கிறதுக்காக விக்ரம் வேதா ரைட்டர் மணிகண்டன் இதில வேலை பார்த்திருக்கார். இந்தபடத்தின் திரைக்கதையில 4,5 பேர் வேலை பார்த்திருக்கோம்.

கதை பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன் ?

ஜீத்து ஜோசப்: இது ஒரு ஃபேமிலி படம், திரில்லர் இருக்கு. ரெண்டு ஃபேமிலி அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில் ஒரு
திரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது.

தம்பி கார்த்தி, அக்காவுக்காக யாரை கொலை பண்றார் அத எப்படி மறைக்கிறார் ?

 

கார்த்தி : ப்பா நீங்களே கதை எழுதிடலாம் போலயே ! தம்பி இரண்டாம் பாகம் எடுத்துடலாம்.

இதுல வேற வேற லுக்ல வர்றீங்களே எத்தனை கேரக்டர் உங்களுக்கு ?

கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டு லுக் தான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டு லுக். ஒரே கேரக்டர் தான். நான் நிறைய கெட்டப் முயற்சி பண்ணினதில்லை. சார் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார் உங்கள சும்மாவே பாக்குறாங்க வேற லுக்லயும் பாப்பாங்கனு கன்வின்ஸ் பண்ணாரு. நான் ஒரு லுக்ல சுத்திட்டு இருக்கேன் இல்லையா அந்த லுக்ல கோவால   நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. சார் பைக்ல கூட்டிப்போய் பாருங்க எவ்வளவு பேர் உங்கள மாதிரி சுத்திட்டு இருக்காங்கனு காட்டினார். கோவா பகுதிக்கு மட்டும் அதை முயற்சி பண்ணிருக்கோம் அப்புறம் நார்மலா ஆயிடுவேன்.

ரெண்டு விதமான பாத்திரம் பண்ணிருக்கீங்க அதில் உள்ள மாற்றங்கள் என்னென்ன ?

கார்த்தி : ரெண்டு கேரக்டர் கிடையாது. ஒரு கேரக்டர் தான் டபுள் ஆக்‌ஷன் கிடையாது ஒரே கேரக்டர் எப்படி டிராவல் ஆகுது அது மட்டும்தான். அது எப்படி மாறுது என்கிறது தான்

ஜீத்து ஜோசப் : இருக்கு, நிறைய வேறுபாடு இருக்கு.  ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார். நீங்க பாருங்களேன் தெரியும்.

உங்க தம்பி தயாரிக்கிற படம் இந்த தம்பி கூட நடிக்கிறீங்க எப்படி இருந்தது ?

 

ஜோதிகா: எதிர் பார்க்கவே இல்ல, எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யாமா இருக்கு. அதுவும் தம்பின்னு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ?  இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?

ஜோதிகா : சூர்யா கூட தான். அவர் கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்.

எப்படியான சண்டை ?

ஜோதிகா: உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை.

கார்த்தி : அண்ணாகிட்ட நேத்து சொன்னேன் நீ பாட்டுக்கு ஆடியோ லாஞ்ச்ல எனக்கு கிளிசரின் போடாம அழுக வராது, இவங்க ஈஸியா பண்ணுவாங்கனு பேசிட்டு போயிட்ட, எங்க ரெண்டு பேரையும் அழுமூஞ்சினு சொல்லப்போறங்கன்னு சொன்னேன்.

அது திறமைதான். கிளிசரின் போடாம அழுறது ஈஸியான விசயம் கிடையாது இல்லையா ?

கார்த்தி : என்னைப் பொறுத்த வரைக்கும் கதை தான் எல்லாத்துக்கும் காரணம் இது எல்லாமே கதை தீர்மாணிக்கிற விசயம்னு நம்புறேன். எல்லாப் படதுலயும் வரும்னு சொல்ல முடியாது. கதை சரியா இருக்கனும் எமோஷன் இருக்கனும் அப்பதான் ஒர்க் அவுட் ஆகும்.

தமிழ் சினிமால நிறைய அக்கா தம்பி வந்துருக்காங்க இதிலென்ன ஸ்பெஷல் ?

ஜீத்து ஜோசப்: அத நீங்க தியேட்டர்ல தான் பார்க்கனும். இதுல எல்லா கேரகடருக்கும் ஒரு அடையாளம் இருக்கும் . ஒரு நோக்கம் இருக்கும் .

கார்த்தி : இல்ல கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆனா அத நீங்க தியேட்டர்லதான் பார்க்கனும்

 

ஜோதிக : இதுல நிறைய ஒரிஜினாலிடி இருக்கும்.

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது எது கஷ்டமா இருந்தது ?

கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன்.

வீட்லயும் அப்படித்தானா ?

கார்த்தி : ம்ம் வீட்லயும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்

ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்.

தமிழ் சினிமால ஜோதிகாவ பொம்பள கமல்னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்கீங்க ?

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும்  கிடையாது அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்த வரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டுந்தான்.

ஜீத்து ஜோசப் : ஒன்ணு சொல்லனும்  இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு ஸீனுக்கு முன்னாடி அவங்க தன்ன தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா ஃபுரபஷனல்.

ஜோதிகா : நன்றி சார்

தம்பினு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில் ?

ஜீத்து ஜோசப் : நிறைய டைட்டில் தேர்ந்தெடுத்தோம் ஆனா இந்தக்கதைக்கு இது தான் சரியா இருந்தது. இந்தப்படமே அக்கா தம்பி கதை தான் அதுனால இது சரினு தோணுச்சு .

கார்த்தி : நிறைய டைட்டில் யோசிச்சோம் கிடைக்கல, ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டாங்க, கெஞ்சி கூடப்பார்த்தோம் ஆனா கிடைக்கல அப்புறம் இந்த டைட்டில் சரியா இருக்கும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் எனக்குள்ள இருக்கிற ஒரு உதவி இயக்குநரா யோசிச்சு, நம்ம மொழில இருக்குற டைட்டில் படத்துக்கும் சரியான டைட்டில்னு இத வச்சுட்டோம்.

ஜீத்து ஜோசப் படத்துல நடிக்கிறதுக்கான ஸ்கோப் அதிகமா இருக்கும் இதுல எப்படி இருந்தது ?

கார்த்தி : என்னை பொறுத்தவரைக்கும் சார் சுதந்திரமா விட்டுடுவாரு. அவங்கங்க பெஸ்ட் எதுவோ அத பண்ண விடுவாரு. அதே நேரம் ஸீனுக்கு என்ன வேணுமோ அத எடுத்துடுவாரு

 

ஜோதிகா : எனக்கு பிடிச்ச விசயம்.. சார் எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பாரு. ஒரு ஸீன் அந்த லாஜிக்கோட இருக்கா ஆடியன்ஸ் பாயிண்ட்ல எப்படி எடுத்துப்பாங்கனு பார்ப்பாரு. இப்ப யாரும் அதப் பாக்கிறதில்ல அது எனக்கு பிடிக்கும்.

நிகிலா விமல் : டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99 க்கும் போக விட மாட்டார் 101க்கும் போக விட மாட்டார். சரியா 100 ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்.

கார்த்தி,  ஜோதிகா படங்கள் பார்த்திருக்கீங்களா ? உங்களுக்கு பிடிச்ச படங்கள் ?

ஜீத்து ஜோசப் : கார்த்தியோட முதல் படம் பருத்திவீரன் அதுலயே கலக்கியிருப்பார். அப்புறம் தீரன், இப்ப கைதி ரொம்ப பிடிக்கும். ஜோ மொழில ரொம்ப பிடிக்கும் அவங்க என்ன பண்ணாலும் சரியா இருக்கும் அது பிடிக்கும். எல்லாப்படங்களும் பார்ப்பேன்

அப்பாவியான எக்ஸ்பிரஷன்ஸ் ஜோதிகா பயங்கரமா தருவாங்க இந்தப்படத்துல இல்லையே ?

ஜீத்து ஜொசப் : இல்லைனு உங்களுக்கு எப்படி தெரியும் படத்துல இருக்கு பாருங்க. ஜோ மேடம் கிட்ட டெட்லி லுக் ஒன்ணு இருக்கு அது இந்தபடத்தில நல்லா வந்திருக்கு.

யார் பார்த்தாலும் பயந்துடுவாங்க இல்ல ?
ஜீத்து ஜொசப் : ஆமா ரொம்ப பயங்கரமா இருக்கும் இந்தப்படத்தில் அது இருக்கு.

சூர்யா பார்த்தாலும் பயந்துடுவாரா ?

ஜோதிகா : நீங்க இதத்ததான் கேப்பீங்கனு தெரியும்.

சத்யராஜ், சௌகார் ஜானகி பயங்கரமா நடிக்க கூடியவங்க கூட நடிக்கும் போது பயமா இருந்ததா ?

கார்த்தி :  சார் நான் அவங்க ரோல் பண்ண முடியாது. சத்யராஜ் சார் ரோலோ, சௌகார் மேடம் ரோலோ என்னால நடிக்க முடியாது. நான் என்னோட ரோல் தான் பண்ண முடியும் அத சரியா பண்ணினா போதும்னு நினைக்கிறேன். அப்புறம் இதுல எல்லாருக்குமே அற்புதமான கதாப்பாத்திரம். அவங்களுக்கான ஸ்பேஸ் இருந்தது. ஒரு படத்தில எல்லாரும் இணைஞ்சு நல்லா நடிச்சா தான் படம் நல்லா வரும். படம் முடிஞ்சு போகும்போது அந்தகேரக்டர் நல்லா இருந்ததுல இந்தக் கேரக்டர் நல்லா இருந்தது அப்படினு பேசினாதான் படம் ஜெயிக்கும் நான் அததான் நம்புறேன்.

சௌகார் ஜானகி மேடம்
ரொம்பவும் அனுபவம் வாந்த நடிகை அவங்களோட நடிச்சது எப்படி இருந்தது ?

 

ஜோதிகா : ஒரு மிகப்பெரிய அனுபவம் அவங்களுக்கு எத்தனை வருட அனுபவம் அவங்களோட சேர்ந்து இருந்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவங்க ஹோட்டலுக்கே போக மாட்டாங்க, ஸ்பாட்லயே தான் இருப்பாங்க, இப்பவும் தொழில்மேல அவங்க காட்டற பக்தி பெரிது. முதல் நாள் ஜீன்ஸ் டீசர்ட்ல வந்தாங்க, யூனிட்ல இருக்க எல்லாத்து கூடயும் பழகுவாங்க அவங்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்தாங்க, எல்லாத்துக்கும் சமச்சு போட்டாங்க.

கார்த்தி : 88 வயசில லைஃப் என்ஜாய் பண்றாங்க, துறுதுறுன்னு இருக்காங்க, படிக்கட்டுல விழுகுற மாதிரி ஒரு ஸீன் நாங்க எதிர்பாக்கவே இல்ல. டக்குனு
விழுந்து எந்திரிச்சுட்டாங்க, நாங்க தான் பயந்துட்டோம்.

ஜீத்து ஜோசப் : ஆமா நாங்க டூப் போட்டுக்கலாம்னோம் ஆனா நானே பண்றேன்னாங்க, விழுந்தா போதுமா படிக்கட்டுல உருண்டு வரவானு கேட்டாங்க, பயங்கரமான எனர்ஜி.

படத்துல உங்க கேரக்டரஸ் எல்லோரட கேரக்டர்ஸ் பத்தி சொல்லுங்க ?

ஜோதிகா : நாங்க எல்லோரும் குடும்பம், நான் ஒரு இளமையான அக்கா அவ்வளவு தான் சொல்லுவேன்

கார்த்தி : இது ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கிற கதை அவ்வளவுதான்.

ஜீத்து சார் நீங்களே திரைக்ககதை மாஸ்டர் இன்னொருவர்  திரைக்கதை வாங்கி பண்றது எப்படி இருக்கு ?

நான் மாஸ்டர் எல்லாம் கிடையாது. மத்தவங்க திரைக்கதைய பண்றதுல சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. என்னோட கதையில என்னோட பார்வை மட்டுமே தான் இருக்கும். முடிவு என் கையில் இருக்கும். மத்தவங்க திரைக்கதையில் அவங்களோட பார்வை இருக்கும். அத நாம சரியா பண்ணணும். இந்தக்கதையில நாலு மூளைகள் வேலை செஞ்சிருக்கு. ஆனா இந்த டீம்ல எனக்கு பிடிச்சது.இறுதியா படம் நல்லா வரனும் அத நோக்கி தான் எல்லாரும் வேலை பாக்குறாங்க யார்கிட்டயும் ஈகோ இல்ல.

ஒரே படத்தில் சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி, சூர்யா நடிக்கிற வாய்ப்புகள் இருக்கா?

ஜீத்து ஜோசப்: நல்ல ஐடியா கொஞ்சம் டைம் கொடுங்க ரெடி பண்ணிட்டு வந்துடுறேன் .

உங்க தம்பி தயாரிக்கிறாரு ஷீட்டிங்கல ஏதாவது சுவாரஸ்யம் நடந்ததா ?

ஜோதிகா : நான் சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன் தம்பி அப்ப ரொம்ப சின்ன பையன். அப்புறம் நான் சென்னையில செட்டில் ஆகிட்டேன். போன்ல தான் பேசிப்போம். இந்தப்படத்துல தான் அதிகம் கூட இருந்துருக்கேன். அம்மா வந்தப்போ அது நிஜமா நடந்தது. அவங்கள்ட எப்பவும் போல ஏதாவது சாப்பிடுங்கனு சொன்னேன். நான் ஹீரோயின் அம்மா இல்ல தயாரிப்பாளர் அம்மா என்ன கவனிச்சுக்கிட்டாங்கனு ரொம்ப பெருமையா சொன்னாங்க, சந்தோஷமா இருந்தது.

உங்க ரியல் லைஃப் ரிலேஷன்ஷிப் இந்தப்படத்துக்கு உதவியா இருந்ததா ?

 

ஜோதிகா : கண்டிப்பா ரொம்ப ஈஸியா இருந்தது. கேஷிவலா நடிச்சோம்

கார்த்தி : ரொம்ப நாளா நடிக்கிறது  உதவியா இருந்தது. கேமரா ஆன் பண்ணிட்டா கேரக்டர்குள்ள போயிடறது. அது பழக்கத்துல வருவது தான்.

ஜோதிகா : ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் டேக் முடிக்கிறது பிடிக்கும் எல்லாமே ரொம்ப ஈஸியா இருந்தது.

படத்தில் ரெண்டு பேருக்கும் சரிசமமான இடம் இருக்கா ?

கார்த்தி : கண்டிப்பா இருக்கு. இந்தக்கதையே அப்படித்தான். ரெண்டு கேரக்டருக்கும் தனிதனி பார்வை இருக்கு ஸ்பேஸ் இருக்கு ரெண்டு முட்டிக்கும் அது சேரும்போது அது அழகா இருக்கும்.

ஜோதிகா : எனக்கு அக்கா கேரக்டர் இதுவரை பண்ணினதில்ல, அம்மா ஓகே இது ரொம்ப புதுசு நல்லா இருந்தது.

உங்க லுக் பத்தி இந்தபடத்தில எப்படி வந்திருக்கு ?

ஜோதிகா : நான் இந்தபடத்தில கார்த்திய விட யங்கா தெரியனும்னு  பண்ணிருக்கேன். அது தான் என் லுக்

கார்த்தி : R D ராஜசேகர் சார் அண்ணியோட ஃபேவரைட் அவர் பண்ணின படங்கள்ல அண்ணி ரொம்ப அழகா தெரிவாங்க, படமும் பெரிய ஹிட், எனக்குல்லாம் குளோசப் ஷாட் ஒரு நிமிஷத்துல முடிஞ்சுடும். அண்ணிக்கு 1/2 மணி நேரம் எடுப்பார். எனக்கெல்லாம் இந்த மாதிரி பண்ணவே இல்லையே சொல்லுவேன்.

நிகிலா இவங்க ரெண்டு பேர் நடிக்கிற படம் எப்படி ஒத்துக்கிட்டீங்க ?

Image result for nikhila vimal in thambi movie

 

நிகிலா விமல்: இந்த டீமே ரொம்ப பெரிசு, பெரிய பெரிய டெக்னீஷியன்கள், இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க இப்படி ஒரு படத்த யார் வேணாம்னு சொல்வாங்க, ஆனா எனக்கு முதல்ல பயம் இருந்தது. தமிழில் எனக்கு ரீஎன்ட்ரி மாதிரி நம்ம கேரக்டருக்கு ஒன்னுமே இருக்காதோனு நினைச்சேன் ஆனா கேரக்டரும் நல்லா இருந்தது அதான் ஒத்துக்கிட்டேன்

சூர்யா எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா அண்ணி கூட நடிக்க ?

கார்த்தி : ம்ம் அப்படில்லாம் எதுவும் கொடுக்கல. அண்ணா ஒரு நாள் மட்டும் ஷீட்டிங் வந்தார்.

ஜொதிகா : நான் சொல்லி செட் பண்ணி  வச்சிருக்கேன்.

நிறைய அக்கா தம்பி கதைகள் வந்துடுச்சு இந்தப் படம் என்ன சொல்லுது ?

கார்த்தி : நான் ஆடியோ லாஞ்ச்ல சொல்லியிருந்தேன். டயலாக் எழுதின பாரதி தம்பி சொல்லியிருந்தார் அவரோட அக்கா பேர் பாரதி அக்கா.பாசத்துல தன்னோட பேர பாரதி தம்பினு மாத்தி வச்சிகிட்டார். அக்காங்கிறது இன்னொரு அம்மானு டயலாக் எழுதியிருந்தார் அது தான் உண்மை. அக்கான்ற உறவு எவ்வளவு பலமானதுனு இந்தப்படம் பேசும்.

மியூஸிக் எப்படி வந்திருக்கு ?

ஜீத்து ஜோசப் : கோவிந்த் வஸந்தா ரொம்ப திறமையானவர். அவர் பண்ணியிருக்கும் படங்கள் பார்த்தாலே தெரியும்.  96 எல்லாம் சூப்பரா பண்ணிருக்கார். இந்தபடத்தில் மூன்று பாடல்கள்  பயங்கரமா பண்ணிருக்கார். பின்னணி இசை எப்படி வந்திருக்குனு பார்க்க நானும் ஆவலா இருக்கேன்