full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கமல் கூறியதாவது, “மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் குறித்து அறிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஏற்கனவே 2016-ல் நடந்த நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போது 4 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவி டப்பட்டது. அப்போதும் கூட சாக்கு போக்குகளை காட்டி அது தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தமது இயலாமைகளை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது இந்த தமிழக அரசு.

எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்கும். பிரச்சனையைப் பற்றி மட்டும் பேசாது. தீர்வுக்கான வழிகளையும் முன்னிறுத்தும். மேலும் இதுவரை நடந்த எங்களின் ஆய்வின்படி முக்கியமான துறைகளில் மய்யத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும். அதை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் தயாரிக்கப்படும்.” என்றார்.