full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

கமலுக்கு போட்டியான ஜெயப்பிரதா!

நேற்று முழுவதுமே தமிழகமெங்கும் கமல்.. கமல்.. கமல் தான். அரசியல் பிரவேசத்தின் முதல் நாளில் சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் கமல். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே அவரைப்பற்றிய பேச்சுக்களாகத் தான் இருந்தது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் கமல் #ஹேஸ்டேக் ஈடாக #கேணி ஹேஸ்டேக்கும் ட்ரெண்டின்கில் இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. கமலுடன் பல படங்களில் நடித்தவரும், கமலின் நெருங்கிய நண்பருமான நடிகை ஜெயப்பிரதா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.