full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.