full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

பொங்கல் விடுமுறைக்கு எம் ஜி ஆர் படத்தின் தொடர்ச்சி

புதுமுக இயக்குநர் எஸ் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் குலேபகாவலி.

இப்படத்தில் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் எம் ஜி ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது.

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலின் `இரும்புத்திரை’, விக்ரமின் `ஸ்கெட்ச்’, விமலின் `மன்னர் வகையறா’ உள்ளிட்ட படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் `குலேபகாவலி’ படமும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.