full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

உறுதியானது நயன்தாராவின் புதிய கூட்டணி!

“அறம்” திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் படங்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் ஒருபடி அதிகமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அவரும் அந்த பொறுப்பை உணர்ந்தவராய் அடுத்தடுத்தப் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் “கோலமாவு கோகிலா”, “விஸ்வாசம்”, சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என அதிக எதிர்பார்ப்பு மிக்க படங்களிலேயே நடித்து வருகிறார். இதில் “விஸ்வாசம்” படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார்.

இவை மட்டுமல்லாமல் “ஈரம்”, “ஆறாது சினம்”, “குற்றம்23” போஒன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

“இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், நயன்தாராவின் கால்சீட் தேதி கிடைத்ததும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் அறிவழகன் உறுதி செய்துள்ளார். மேலும், இப்படம் ஒரு சைக்கலாஜிகல் திரில்லர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்”.

ஆக, லேடி சூப்பர் ஸ்டாருக்கு 2018 லக்கி வருசம் தான்!!