full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

ரஜினி வீட்டில் குற்றம் 23

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’. அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ‘குற்றம் 23’ படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது அவர்களை அழைத்து மனமாற பாராட்டு தெரிவிக்கும் வழக்கம் உடையவர் ரஜினிகாந்த். தனது நண்பர்களில் ஒருவரான விஜயகுமாரின் வாரிசு அருண்விஜய்யின் வெற்றியை பாராட்டியதில் வியப்பில்லை என்றே கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *