full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

உறுதியாகின ரஜினியின் கூட்டணி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிநிருந்தன.

நடிகர் ரஜினியிடம் கதை கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா ரஜினியின் இல்லத்திற்கு சென்றிருந்தார் .

இந்நிலையில் இன்று நடைபெற்ற லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார்.

ரஜினியை சந்தித்தது மட்டுமல்லாமல் , அவரது குடும்ப விழாவிலும் சிவா நெருக்கம் காட்டி வருவதால் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதியாகி உள்ளதாக ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.