full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

ஷாருக்கானுடன் இணைந்த பிங்க் கூட்டணி

ஷாருக்கான் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும்பாலும் ஷாருக்கான் நடிக்கும் படங்களும் ஜான் ஆப்ரஹாம், சித்தார்த் மல்ஹோத்ரா, அஜய் தேவ்கன், நடித்த படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக ஷாருக்கான் தயாரிப்பில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார்.

பிரதான பாத்திரத்தில் அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘பட்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுஜய் கோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி இருவரும் ஏற்கெனவே ‘பிங்க்’ படத்தில் நடித்துள்ளனர்.

ஷாருக்கான் தயாரிப்பில் முதல் முறையாக அமிதாப் நடிப்பது, ‘பட்லா’ திரைப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.