full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

சிம்பு படத்தில் மேலும் ஒரு இசையமைப்பாளர்

முன்னணி நாயகனாக வலம் வரும் சிம்பு, தற்போது ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக வலம் வரவுள்ளார். சந்தானம், வைபவ் சாண்டில்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்து வருகிறார்.

முக்கியமான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்ட படக்குழு, தற்போது பாடல்களை படமாக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்காக ஏற்கனவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இசையமைப்பாளர் பாட்டு பாடியுள்ளார். ‘காஞ்சனா 2’, ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ், சிம்பு இசையமைக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தில் ‘உனக்காக உனக்காக…’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் பதிவு செய்யும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *