full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

தியேட்டர் சீட்டில் ரசிகர்களை கட்டி வைக்கும் சிம்பு

 
சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.
 
அந்த தகவல்கள் குறித்து சிம்பு, “ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எனது அடுத்த படம் பற்றிய யூகங்களை நிறுத்துங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த, முதற்கட்ட தகவலை சிம்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்…’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டாம் முறை எழு. விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. செப்டம்பர் 2017 வெளியீடு. யுவன் சங்கர் ராஜா இசை.
 
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.