full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

பதவிகளால் திணறும் திமிரு நடிகர்!

தற்போது சினிமாத்துறையில் உள்ள முக்கிய சங்கங்களின், முக்கிய பொறுப்புகளுக்கு விசாலமான நடிகர் வந்திருக்கிறார். இளம் வயதிலேயே முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் நடிகருக்கு ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும், மறுபக்கம் சிறு பயமும் இருக்கிறதாம்.

சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.

இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்த நடிகர், இப்போது பயங்கர டென்ஷனோடு இருக்கிறாராம். இதனால், பொதுமேடையில் பேசும்போதுகூட, என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? நாம் பேசுவது சரிதானா? சாத்தியம்தானா? என்பது தெரியாமலேயே உளறி கொட்டுகிறாராம்.

இதனால், திரைத்துறையினருக்கு, இந்த நடிகரின் மீது மிகப்பெரிய அதிருப்தி வந்துள்ளதாம். பதவிகளை பிடிப்பதற்காக இவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.