full screen background image
Search
Tuesday 23 April 2024
  • :
  • :
Latest Update

11-ம் வகுப்புத் தோல்வி மாணவர்கள், 12-ம் வகுப்பில் தொடர்வார்கள் – செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “

’11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்தல் நேரம் மூன்றிலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது. பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சி, சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் அதிக திறன் உள்ளவர்களாக மாற்றப்படுவார்கள்.

செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்கால பணிகள், அரசு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பர். 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2, 7, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள். 11ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம். தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.