full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

 

 

நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங்கள் குறிப்பிடதகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.


Creative Entertainers & Distributors நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதவாது…
நடிகை சுமன் ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்தக்கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தோம் அவரும் இக்கதாப்பத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவரே, ஆனால் அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது கன்னட பதிப்பில் இந்தக்கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

சுமன் ரங்கநாதன் வெகு அற்புதமான நடிப்பால் இந்தகதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம். தமிழில் சில குறிப்பிடதகுந்த வெற்றிபடங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்குபெறும் பகுதியின்  படப்பிடிப்பு  முழுதாக முடிந்து விட்டது. சென்னையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்குபெற்ற பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் ஜான் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனஞ்செயன் தழுவிய

 

 

 திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.
Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார்.  ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.