full screen background image
Search
Tuesday 23 April 2024
  • :
  • :
Latest Update

அப்பா பட தலைப்பில் வெளியான மகனின் ஃபர்ஸ்ட் லுக்!!!!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் லுக் வீடியோ நேற்று ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
இந்த போஸ்டர் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள காட்சியை நினைவூட்டுவது போல் அமைந்திருப்பதாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தலைப்பானது 1977 ஆம் ஆண்டு சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் நடித்து வெளியான படத்தின் பெயராகும். பழைய ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயர் கொணட நடிகர் சிவக்குமார் படத்தின் போஸ்டரையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது