தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சூர்யா. அஜித்-விஜய் ஆகியோருக்கு அடுத்ததாக பலரும் தன்னுடைய ஃபேவரிட் நடிகர் என கை காட்டுவது சூர்யாவாக தான் இருக்கும்.

காப்பான், என்ஜிகே ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இப்படம் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டது.

இதனால் படக்குழு படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைத்துள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை அல்லது பொங்கலுக்கு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் தெலுங்குவிலும் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இதுவரை தெலுங்குவில் சூர்யாவிற்கு டப்பிங் பேசிய கலைஞரை மாற்றி இந்த படத்தில் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட்டான சத்யதேவ் என்பவருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.

இந்த படத்தின் சத்ய தேவ் என்பவரின் குரல் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கீதை எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங் உடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.