full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

தல 61- இயக்குனர் யார் ? – முதல் முறையாக வெளியான தகவல்.

தல 61 படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

Thala 61 Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச். வினோத் இயக்கி வரும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால் தல அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

வினோத் ஆரம்பத்திலேயே அஜித்திடம் மூன்று கதை கூறியிருந்தாராம். அதில் ஒன்று தான் தற்போது உருவாகி வரும் வலிமை.

மீதமுள்ள இரண்டு கதைகளில் ஒன்று தான் தல 61 படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.