full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

விஸ்வாசம் அப்டேட்: இரண்டாவது போஸ்டரை வெளியிடும் படக்குழு..!!

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘விஸ்வாசம்’. படத்தின் படப்பிடிப்பு இறுதுகட்டத்தை எட்டியுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் மிகபிரம்மாண்டமான முறையில் இப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.