full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

ஊர் தலைவராக மாறிய விஜய்!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுள்ளது.

மதுரை மானூரைச் சேர்ந்தவரான விஜய், அந்த ஊரின் தலைவராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஊர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனது சொந்த செலவில் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *