full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

என் வாழ்வின் முக்கியமான படம்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது.
கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் சேதுபதி பேசும் போது,

“எனக்கு தெரிந்த வகையில் தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா’ அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா’. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் – காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும்” என்றார்.