full screen background image
Search
Tuesday 23 April 2024
  • :
  • :
Latest Update

விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ வெளியாவதில் தாமதம் ஏன்?

விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி, லிங்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘சிந்துபாத்’ இன்று வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன் படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய் 17 கோடி தரவிருக்கிறது.

இதனால் ராஜராஜன் மீது வழக்கு தொடர்ந்தது பாகுபலி படத்தரப்பு ‘சிந்துபாத்’ வெளிவர நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியது. இதனால் மே 16ம் தேதி வெளியாகவிருந்த ‘சிந்துபாத்’ ரிலீஸ் தாமதமானது. அந்த வழக்கில் தான் படத்தின் தயாரிப்பாளர் இல்லை எனவும், சேதுபதி தயாரிப்பாளர் ஷான் சுதர்ஷன்தான், சென்சார் சான்றும் அவர் பெயரில்தான் உள்ளது எனவும், அவரே இந்தப் படத்தின் முழு காப்புரிமைக்கும் உரிமையாளர் எனவும் விளக்கம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தடை உத்தரவு நீக்கப்பட்டு படம் ஜூன் 21ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்திருக்கும் சிந்துபாத் பட ஸ்டில்

இதற்கிடையில் நேற்றைய முன்தினம் இப்படத்தை நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை வெளியிடுவதாகக் கூறி ஆர்கா மீடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் பூஜிதா கொரன்டாலா ராஜ ராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு படத்தை வெளியிட மீண்டும் தடை உத்தரவு வாங்கியது. அந்த தடையை நீக்கக்கோரிய வழக்கில் ‘கே’ புரடக்‌ஷன்ஸ் ராஜராஜனுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வான்சன் நிறுவனமும், யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து தடை உத்தரவை நீக்கக் கோரியுள்ளது.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் வாங்கிய நீமன்ற தடை உத்தரவின் பேரில் படத்தை வெளியிடுவதற்கான சேவையை செய்ய இயலாது என டிஜிட்டல் சர்விஸ் புரவைடரான கியூப் சினிமாஸ் தெரிவித்திருக்கிறது. இதனால் படம் வெளியாவதில் மேலும் தாமதம் நீடித்து வருகிறது. முன்னதாக, கியூப் நிறுவனம் சம்மதம் தெரிவித்தால்தான் ‘சிந்துபாத்’ படத்தை எங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என சென்னையிலுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக, நேற்று இரவு கியூப் நிறுவனத்திடம் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ‘பாகுபலி’யின் பண பாக்கி பிரச்னைக்கும் ‘சிந்துபாத்’துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என சட்டப்பூர்வமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும், கியூப் நிறுவனம் படத்தை வெளியிடத் திரையரங்குகளுக்கு தேவையான ‘கேடிஎம்’ களை தர மறுத்துதால் கைகலப்பு ஏறப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே படக்குழுவுடனும், தங்கள் நிறுவனத்தின் வழக்கறிஞரிடமும் பேசி இதைச் சுமுகமாக முடிக்க வேலைகளை மேற்கொண்டு வருகிறது கியூப் நிறுவனம்.

இந்நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' வெளியாவதில் தாமதம் ஏன்? முழு விவரம்