full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

விக்ரம் வேதா இந்தி ரீமேக்!

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்
உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், அனைத்து ரீமேக்குகளையுமே தானே தயாரிக்கவுள்ளதாக சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் அமேசான் வெப் சீரியஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ரீத்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது மாதவனிடம் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “இந்தாண்டு கண்டிப்பாக ‘விக்ரம் வேதா’
இந்தி ரீமேக் தொடங்கப்படும். எனது கதாபாத்திரத்தில் நானே நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு பெரிய வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்கள் தேதிகள் அளிக்க காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார் மாதவன்.

முன்னதாக, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அப்பேச்சுவார்த்தையிலிருந்து ஷாருக்கான் விலகி விட்டார்.