full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் குறித்து விஷால்

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதனால் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து, நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், “அறிவிக்கப்படாத திடீர் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ் நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விழாக்காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகம் ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.