சசிகுமாரும் அவரது தந்தை ஆடுகளம் நரேனும் சென்னையில் உள்ள ஒரு ரேஸ் கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். சசிகுமார் தயார்படுத்தும் குதிரையை யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு தாயர் செய்து வைத்திருக்கிறார். ஒரு போட்டியில் சசிகுமாரும் அவரது குதிரையும் கலந்துக் கொள்கிறது.இதனிடையே இவருடைய நண்பரின் மனைவிக்கு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிப் பெற்றால் மட்டுமே அதில் வரும் பணத்தை என் மனைவியின் மருத்துவ தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நண்பர் சசிகுமாரிடம் தெரிவிக்கிறார். இதனை சசிகுமார் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவருக்காக விட்டுக் கொடுத்துவிடுகிறார். இதனால் போட்டியில் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுட்டுக் கொன்று விடுகிறார்.இதனை தாங்கிக் கொள்ள முடியாத சசிகுமாரின் தந்தை இது குறித்து வாதிடுகிறார். இந்த துயரத்தால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிடுகிறார். இந்த குற்ற உணர்ச்சியில் சசிகுமார் அவரின் சொந்த ஊருக்கு செல்கிறார்.
அங்கு ஊர் கோவிலுக்காக இரண்டு கிராம மக்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி இதற்கு தீர்வு காண முயற்சிக்கின்றனர்.அந்த போட்டியில் 18 வகை மாடுகளை அழைத்து அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தீர்மானித்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். இதில் சசிகுமார் கலந்துக் கொள்கிறார். இதில் யார் வெற்றிப் பெற்றது? விலங்குகளின் உணர்வை சசிகுமார் புரிந்துக் கொண்டாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சசிகுமாரின் தனித்துவமான கிராமத்து நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். அவருடைய நடிப்புக்கு இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தின் கதாப்பாத்திரத்துக்கு ஏற்றார்ப்போல் சசிகுமார் எமோஷனை கொடுத்து நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் பார்வதி அருண் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டும் படி அமைந்துள்ளது.தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
படத்தின் கதையையும் வித்யாசமான கதைக்களத்தையும் வடிவமைத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் ஹேமந்த். மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார். கதையின் திரைக்கதையும் விலங்குகளுக்கு இருக்கும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும் அது படத்தின் நீரோட்டத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. படத்தின் வசனங்கள் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
கணேஷ் சந்த்ராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. டி.இமானின் பின்னணி இசை படத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.