full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,
“இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு அசோகமித்திரன், மறைந்த திரு ஆதவன், புகழ்மிக்க திரு ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்.”

இவ்விழாவில் கலந்து கொள்வதற்கென இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். செப்டெம்பர் 15ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.