படத்தின் கதை
மதுரையில் பெரிய தாதாவாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரை ஒரு ஹீரோ, கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். இதற்காக இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார்.
சென்னையில் போலீஸ் எஸ்.ஐ.க்கு தேர்வாகி கொலை பலியால் ஜெயிலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ராகவா லாரன்சை கொலை செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
எஸ்.ஜே.சூர்யாவும் அதை ஒப்புக் கொண்டு மதுரை செல்கிறார். அங்கு ராகவா லாரன்ஸ் இயக்குனர் தேடுவதை அறிந்து, உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடனே பயணிக்குறார். படம் எடுக்கும் சாக்கில் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.
இறுதியில் ராகவா லாரன்சை எஸ்.ஜே.சூர்யா கொன்றாரா? எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம் ராகவா லாரன்சுக்கு தெரிந்ததா? ராகவா லாரன்சை வைத்து எஸ்.ஜே.சூர்யா படம் எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நுணுக்கமாக பயன்படுத்திய வார்த்தைகள்
மாட்டு மூளை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
3 மணி நேர சினிமா 30 வருஷ அரசியலை முடித்து விட்டது.
கோமாறே ஏன்?
நடிப்பு, பாடல், இசை
ராகவா லாரன்ஸ், S.J. சூர்யாவின் நடிப்பு பிரமாதம். நிமிஷா சஞ்சயன் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். ஏற்கனவே சித்தா படத்தில் இவருடைய நடிப்பு படைய கிளப்பியது. அதே போல் இந்த படத்திலும் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன் என்று prove செய்திருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பல காட்சிகளுக்கு இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார்.
பாடல்கள் மொத்தமாக 4 பாடல்கள் உள்ளது. இதில் மாமதுர அன்னக்கொடி என்ற பாடல் படத்திற்கு கிடைத்த வரம்.
படம் பற்றிய அலசல்
படத்தில் சில சீன்களை தவிர்த்து, படத்தின் ஓட்ட நேரத்தை குறைதிருந்தல் நட்ச்சென்று இருந்திருக்கும்.
எத்தனை படங்கள் நடித்தாலும் ராகவா லாரன்ஸுக்கு முனி காஞ்சனா உள்ளிட்டா படங்களில் இடம் பெற்றது போல் இந்த படத்திலும் ஒரே ஒரு பாடல் காளி பாடல் உள்ளது.
அசால்ட் சேதுவிற்க்கு கடைசியாக ஒரு போஸ்ட் Credits உள்ளது. அது தான் ஜிகர்தண்டா 2 படத்திற்கு Highlight. ஜிகர்தண்டா XXX- க்கும் ஒரு lead உள்ளது. அந்த lead படி பார்த்தால் S.J.சூர்யாவும், அசால்ட் சேதுவான பாபி சிம்ஹாவையும் அடுத்த ஜிகர்தண்டா XXX படத்தில் எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் படம், உப்மாவாக இல்லாமல் கிட்சடியாக வந்து உள்ளது.