full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தலைவர் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் தலைமையில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவரது தலைமையில் நடைபெற்ற விழாவில், காலையில் குன்றத்தூரில் உள்ள சிவன் கோவிலில் ரஜினிகாந்தின் பெயரில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அன்னதானம் நடைபெற்றது.

மேலும், பம்மல், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானமும், இலவச வேட்டி, சேலைகள், தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதுதவிர, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே ரத்ததானமும் நடைபெற்றது. இந்த விழாவில், ஜெ.ஜெயகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.