“ நானும்சிங்கள்தான் ” இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்துவந்தவர்.

News

 

’’நானும் சிங்கள் தான் “தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம்.

அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத்  ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று ,

தனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர்கள்  இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை பயிற்சியும் பயின்றிருக்கிறார்.

தற்போது இந்த படத்தில் முன்று பாடலுக்கு இசைஅமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க காதல் சாயலில் உருவாகியுள்ளது, மேலும் இந்த பாடல்கள் அனைத்தும் இளம் வயதினரை கவர்ந்து , இந்த வருடத்தின் சிறந்த காதல் பாடல்களாக வளம்வரும் என படக்குழு தெரிவிக்கின்றனர்.