full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குனர் கார்த்திக்கை சிவப்பு கம்பளம் வரவேற்கிறோம் – ”அடங்கமறு” வெற்றி விழாவில் ஜெயம்ரவி!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.

கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.

நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார்.  இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில்  இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.