என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி”- தனுஷ்

News
0
(0)

முதன்  முதலாக  தனுஷ்  நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு  விநியோகபங்குதாரராக  உயர்ந்திருப்பதில்YNOTX பெருமை கொள்கிறது.  ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர் எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”.

கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ்எறேரா  பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராக  பணிபுரிந்திருக்கிறார். பக்கிரி திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் கதை களத்தை மையமாக கொண்ட திரைப்படங்களை இந்திய-தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், அடுத்த நிலைக்கு தன்னை உயர்த்தி இருக்கிறது YNOTX.

இது குறித்து YNOTX-இன் சஷிகாந்த்கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க கதையை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், தனுஷின் திரை ஆளுமை, திரைப்படத்தின் கருத்துடன் இணைந்து, இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் விதம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஒரு எங்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி”

இது குறித்து தனுஷ் கூறுகையில் “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி”

அபயானந் சிங், சி ஈஓ, கோல்டன் ரேஷியோ பேசுகையில் “கோல்டன் ரேஷியோ இத்தகைய சர்வதேச வெளியீடுகள் கொண்ட ஒரு திரைப்டத்துடன் தன்னை இணைத்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.  திரைபடங்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. YNOTX உடன் இணைந்து செயல்படுவதுஇத்திரைபடத்தை பறந்து விரிந்த இந்திய திரை ரசிகர்களைசென்றடைய ஒரு ஆகச்சிறந்த வழியாக கருதுகிறோம்”.

இயக்குனர் கென் ஸ்காட், “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒப் தி ஃபகீர்’ ஒரு இகியா துணி அலமாரியில் அடைபட்டு கிடக்கும் ஒரு பகீரின் நீதிக்கதை.  இக்கதை வாய்ப்புகள், கர்மா, மற்றும் சுயவிருப்பங்களை மையமாக கொண்டது. இது மும்பையில் வசிக்கும் ஒரு அண்டை வீட்டு சிறுவன், தன்னை அறியும் நோக்கில் ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை”.

“இந்த இதயப்பூர்வமான காமெடி திரைப்படத்தை படமாக்கும் தருணம், பல திறமையான இந்திய நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதை அழகைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் காமெடி டச்சுடன் ரசிகர்களை ஈர்க்கும் விதம் அலாதியானது”.

தமிழில் தனுஷ் நடித்து வெளியாகும் ‘பக்கிரி’, வரும் ஜூன் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.